ஆம், அவர்களும் கலந்துக்கொள்ளலாம்.
இந்த தீட்சை வகுப்பில் கலந்துக்கொள்வது பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. இது உண்மையில் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இல்லை, வெளிநாடுகளுக்கு இதை கொண்டுசேர்ப்பதில் உள்ள சவால்களால் தற்போது ருத்ராட்ச தீட்சை இந்தியாவில் இருப்போருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆம். இந்த சாதனா செய்யும் போது உடல்ரீதியாக எந்தவித தொந்தரவும் இருக்காத இடமாகப் பார்த்து தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.
லேசான வயிற்றுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது சிறந்தது. [முழுமையான உணவு எடுத்திருந்தீர்கள் என்றால் 2.5 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.]
அதிகபட்ச பலனைப்பெற ருத்ராட்சத்தை எப்போதுமே அணிந்திருப்பது நன்மை தரும். ஆனால், சில சூழ்நிலைகளில் நீங்கள் கழட்டிவிட விருப்பப்பட்டால் அப்படியும் செய்யலாம். குளிப்பதற்கு சுடுதண்ணீர் அல்லது இரசாயன சோப்பினை பயன்படுத்துகிறீர்கள் என்றால் குளிக்கும் போது ருத்ராட்சத்தை அணிந்திருக்க வேண்டாம். ஏனெனில் ருத்ராட்சம் இதனால் உடைந்துவிடும் தன்மைக்கொண்டது. இல்லையென்றால் இதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.
நீங்கள் சாதனாவை தொடர முடியும். இருந்தாலும், பழுதுப்பட்ட ருத்ராட்சத்தை அணிவது உகந்ததில்லை என்பதால், உடைந்த ருத்ராட்சத்தை நீர் ஒடும் ஆற்றிலோ, ஓடையிலோ போட்டுவிடலாம் அல்லது ஈரப்பதமான மண்ணில் புதைத்து விடலாம்.
லேசான வயிற்றுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது சிறந்தது. [முழுமையான உணவு எடுத்திருந்தீர்கள் என்றால் 2.5 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.]
உடல்ரீதியாக எந்தவித தொந்தரவும் இல்லாத எந்தவொரு இடத்திலும் இந்த பயிற்சியினை நீங்கள் செய்யலாம்.
ருத்ராட்சம் பல நன்மைகளைக் கொண்டிருப்பதால் அதனை எப்போதும் அணிந்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அது சாத்தியம் இல்லை என்றால், நீங்கள் அதனை பூஜை அறையில் வைக்கலாம். தீட்சையில் கலந்துக்கொண்டு சத்குரு வழிகாட்டியபடி சாதனாவை பின்பற்றுவது சிறந்தது.
எந்தவொரு எதிர்மறை விளைவும் இருக்காது. இருந்தாலும், சாதனாவை செய்வது நன்மை அளிப்பதுடன், ஒருவரது நல்வாழ்விற்கு உகந்ததாகவும், ஒருவரது ஆன்மீக பயணத்திற்கு மிகுந்த உறுதுணையானதாகவும் இருக்கும்.
ருத்ராட்ச தீட்சை மஹாசிவராத்திரி அன்று இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கப்படுகிறது. பெரிய அளவில் கையாளப்படத் தேவையுள்ளதால் இதை அனுப்ப சில மாதங்கள் ஆகலாம்.
உங்களுடைய ஒத்துழைப்பையும் புரிதலையும் வேண்டுகிறோம். இந்திய அஞ்சல் மூலமாக இது அனுப்பப்படும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.
டெலிவரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நீங்கள் தயவுசெய்து பொறுமை காத்து, உங்களது பார்சல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். இந்த பார்சலை தயாரித்தல் மற்றும் விநியோகத்தை கவனித்துக்கொள்ளும் *அஞ்சல் நிறுவனம்?* (அஞ்சல் துறையைக் குறிப்பிடவும்) இதனை பகுதி பகுதியாக செயல்படுத்தி வருகின்றது.
முன்பே சொன்னது போல் நீங்கள் ருத்ராட்சத்தைப் பெறும்போது ஏற்கனவே அது பதப்படுத்தப்பட்டுவிட்டதால் நீங்கள் மீண்டும் அதை செய்ய தேவையில்லை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ருத்ராட்சத்தை நெய்யில் 24 மணி நேரமும் அடுத்த 24 மணி நேரம் பாலிலும் ஊற வைத்து பதப்படுத்தலாம். அதன் பின் சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அணிந்துக்கொள்ளலாம்.
அது போல நிபந்தனைகள் ஏதும் இல்லை. மற்ற ருத்ராட்சத்துடன் சேர்த்து இதனையும் நீங்கள் கழுத்தில் அணிந்துக் கொள்ளலாம். ஏற்கனவே பிராண பிரதிஷ்டை மூலம் சக்தியூட்டப்பட்டுள்ளதால், இதை அணிவதற்கு முன் எந்தவொரு சடங்கினையும் பின்பற்ற தேவையில்லை.
இந்த ருத்ராட்சத்தை கீழ்க்கண்ட விதங்களில் நீங்கள் பராமரிக்க முடியும்:
சாயம் சேர்க்காத சுத்தமான பருத்தி அல்லது பட்டு நூலினால் ஆன கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிய வேண்டும். செம்பு, வெள்ளி அல்லது தங்க சங்கிலியிலும் கோர்த்து அணியலாம், ஆனால் ருத்ராட்சத்தை வெட்டி விடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், ருத்ராட்சத்தை சேதப்படுத்தி விரிசலை உருவாக்கும் விதமாக கம்பியை இறுக்கமாகவும் கட்டக்கூடாது. இந்த பார்சலில் ருத்ராட்சத்திற்கான ஒரு கயிறும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அடுத்த கேள்வியினையும் பாருங்கள்.
இந்த பார்சலில் இரண்டு விதமான கயிறுகள் இருக்கின்றன:
சிறிய கயிறு, ருத்ராட்சத்தை கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்வதற்கு.
பெரிய கயிறு அபய சூத்திரம், சந்தேகங்களையும் பயத்தினையும் போக்குவதற்காக சக்தியூட்டப்பட்ட கயிறு. இந்த அபய சூத்ரத்திவினை குறைந்தது ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) அணிந்திருக்க வேண்டும். பொதுவாக இது 3லிருந்து 4 மாதங்களை வரை பலனளிக்கும். இந்த சூத்திரத்தை உங்களது கைக்கடிகாரம் அல்லது மற்ற ஆபரணங்களுடன் சேர்த்து அது நீடித்து இருக்கும் வரை அணிந்துக்கொள்ளலாம்.
சூத்திரத்தை அகற்ற, அதன் முடிச்சுகளை அவிழ்க்கலாம் அல்லது எரித்து அவிழ்க்கலாம். எப்போதும் அபய சூத்திரத்தை கத்தரிக்கக்கூடாது.
சூத்திரத்தை நீங்கள் கீழ்க்கண்ட விதங்களில் அப்புறப்படுத்த முடியும்:
o பூக்கும் அல்லது பழம் தரும் மரங்களின் கிளைகளில் கட்டலாம்
o மண் ஈரமாக இருக்கும் ஒரு மரம் அல்லது செடிக்கு கீழே புதைக்கலாம்
o எரித்து அதன் சாம்பலை விசுத்தி சக்கரத்திலிருந்து ( தொண்டைக்குழி) கீழே அனாகதா சக்கரம் (நெஞ்சுக்குழிக்கு சற்றுக்கீழே) வரை பூசிக்கொள்ளலாம்
ஏதோவொரு காரணத்தால் உங்களுக்கு ருத்ராட்சம் அணியமுடியாமல் போனால், அதை இயற்கையான பருத்தி அல்லது பட்டுத்துணியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தயவுசெய்து உலோகத்தால் ஆன பெட்டிக்குள் வைக்கவேண்டாம்.
ருத்ராட்சத்தை அணியத் துவங்கும் முன் அதை பதப்படுத்துவது முக்கியம். புதிய ருத்ராட்ச மணிகளை பதப்படுத்த, அவற்றை முதலில் நெய்யில் (உருக்கிய வெண்ணெய்) 24 மணி நேரம் ஊறவைத்து, பின்பு கொழுப்பு நீக்கப்படாத பாலில் மேலும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரில் அலசி ருத்ராட்ச மணிகளை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும். அவற்றை சோப் அல்லது பிற சுத்தப்படுத்தும் திரவங்கள் கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ருத்ராட்சத்தைப் பதப்படுத்துவது அவசியம்.
செம்பு என்பது ஒருவித சக்தியை உற்பத்திசெய்து தியானத்திற்கு உதவக்கூடியது. அதனை உடலோடு தொடர்பில் இருக்கும்படி அணிந்தால் அது ஒருவரது சக்தி உடலை வலுப்படுத்தவும், ஸ்திரப்படுத்தவும் செய்யும்.
ருத்ராட்சத்தின் இருபுறமும் முடிச்சுப் போடுவதாக இருந்தால் கவனமாகப் போடவேண்டும், இல்லாவிட்டால் ருத்ராட்சத்தின் உட்பகுதியில் விரிசல் ஏற்படலாம். அழுத்தத்தால் இப்படி உள்ளே விரிசல் ஏற்பட்டால் அந்த ருத்ராட்சத்தை அணியக்கூடாது. மேலும் ருத்ராட்சத்தைச் சுற்றி உலோக மூடி போட வேண்டாம்.
https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ruthratcham-rudraksha-in-tamil
விபூதி அல்லது புனிதமான சாம்பல் சிவனுடன் நெருக்கமான தொடர்புடையது. சிவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுவதும் சாம்பல் தரித்தவராய், இந்த உடலின் மாய்ந்துபோகும் தன்மையைக் குறிக்கும் விதமாக சித்தரிக்கப்படுகிறார். ஆன்மீக செயல்முறையின் அடிப்படையே, ஒருவர் தான் ஒருநாள் இறந்துபோவார் என்பதை உணர்வதில்தான் இருக்கிறது. விபூதி என்பது இதை தொடர்ந்து நினைவுபடுத்துவதாய் இருக்கிறது. இந்திய கலாச்சாரத்தில், ஒரு ஆன்மீக சாதகர் இதை ஒரு சக்திவாய்ந்த கருவியாக பயன்படுத்துகிறார். இது ஒருவரின் கிரகிப்பாற்றலை மேம்படுத்துவதோடு, முறையாக தயாரிக்கப்பட்டு உடலில் பூசப்பட்டால், சக்தியைப் பரிமாற மகத்தான ஊடகமாகவும் விளங்குகிறது.
பாரம்பரியமாக, யோகிகள் மயானங்களில் இருந்து எடுத்த சாம்பலை பயன்படுத்தினார்கள், ஆனால் பசுஞ்சாணம் அல்லது நெல் உமியைக் கொண்டும் விபூதியை தயாரிக்கமுடியும்.
ஈஷா விபூதி, தியானலிங்கத்தில் குறிப்பிட்ட காலத்தில் வைக்கப்பட்டு அதன் சக்தியை உள்வாங்கும் விதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
பாரம்பரியமாக, விபூதியை மோதிர விரலையும் கட்டை விரலையும் பயன்படுத்தி கையில் எடுக்கப்பட்டு, ஆக்ஞா சக்ரா என்றழைக்கப்படும் புருவமத்தி, விஷுத்தி சக்ரா என்றழைக்கப்படும் தொண்டைக்குழி, அனஹதா என்றழைக்கப்படும் விலா எலும்புகள் சந்திக்கும் இடத்திற்கு கீழுள்ள நெஞ்சின் நடுப்பகுதி ஆகிய இடங்களில் உடலில் பூசப்படுகிறது.
விபூதி, தெளிவை மேம்படுத்த ஆக்ஞாவில் வைக்கப்படுகிறது, நீங்கள் இருக்கும் நிலையை சக்தியானதாக்க விஷுத்தியில் வைக்கப்படுகிறது, உங்கள் வாழ்க்கைக்குள் அன்பு மற்றும் பக்தியின் பரிமாணத்தைக் கொண்டுவர அனஹதாவில் வைக்கப்படுகிறது.
அபய சூத்ரா என்பது, ஒருவர் தன் மணிக்கட்டில் கட்டக்கூடிய பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு நூல். "அபய" என்றால் "பயமில்லாத" என்று பொருள், இந்த நூல் ஒருவர் தன் பயத்தைக் கடந்து குறிக்கோளை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும்.
பருத்தி நூல் கொண்டு அபய சூத்ரா தயாரிக்கப்படுகிறது.
இதனை, பெண்கள் இடது மணிக்கட்டைச் சுற்றியும், ஆண்கள் வலது மணிக்கட்டைச் சுற்றியும் அணியவேண்டும். இதை குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு அணியவேண்டும். பின்பு இதனை அவிழ்த்தோ எரித்தோ கழற்றவேண்டும் (வெட்டி எடுக்கக்கூடாது). கழற்றிய சூத்திரத்தை ஈரமண்ணில் புதைக்கவேண்டும் அல்லது எரித்து உங்களது விஷுத்தியில் இருந்து (தொண்டைக்குழி) அனஹதா வரை (மார்பெலும்புக்குக் கீழுள்ள பகுதி) பூசிக்கொள்ள வேண்டும்.
https://isha.sadhguru.org/in/
"ஆதியோகியின் மகத்துவம் இதுதான் - மனிதர்களின் உயிர் வளர்ச்சிக்கு, காலம்கடந்த மகத்துவம் வாய்ந்த கருவிகளை அவர் வழங்கினார்." - சத்குரு
15,000க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு, மதங்களெல்லாம் தோன்றுவதற்கு முன், முதலாவது யோகியான ஆதியோகி சிவன், யோக அறிவியலை தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு பரிமாறினார். மனிதர்கள் தங்களை எல்லைகளைக் கடந்து உச்சபட்ச ஆற்றலை அடைவதற்கான 112 வழிகளை வழங்கினார். ஆதியோகியின் அர்ப்பணிப்பு, தனிமனிதர்களின் தன்னிலை மாற்றத்திற்கான கருவிகளாகும். தனிமனித மாற்றம்தான் உலகை மாற்றுவதற்கான ஒரே வழியாகும். அவர் அடிப்படையாக விட்டுச்சென்ற செய்தி, மனிதர்கள் நல்வாழ்வுக்கும் விடுதலைக்கு "உள்முகமாகத் திரும்புவதுதான் ஒரே வழி."
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதகுலத்திற்கு ஆதியோகி வழங்கிய தன்னிலை மாற்றத்திற்கான கருவிகள், இன்றளவும் மகத்துவமானதாக இருப்பதோடு நில்லாமல், அவசியமானதாகவும் இருக்கின்றன. ஈஷா யோக மையத்திலுள்ள 112-அடி உயர ஆதியோகி திருமுகம் இதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக இருப்பது அனைவருக்குமான ஊக்கசக்தியாகவும் விளங்குகிறது.
ருத்ராட்ச தீட்சை மஹாசிவராத்திரி அன்று இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கப்படுகிறது. பெரிய அளவில் கையாளப்படத் தேவையுள்ளதால் இதை அனுப்ப சில மாதங்கள் ஆகலாம்.
உங்களுடைய ஒத்துழைப்பையும் புரிதலையும் வேண்டுகிறோம். இந்திய அஞ்சல் மூலமாக இது அனுப்பப்படும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.
டெலிவரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நீங்கள் தயவுசெய்து பொறுமை காத்து, உங்களது பார்சல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். இந்த பார்சலை தயாரித்தல் மற்றும் விநியோகத்தை கவனித்துக்கொள்ளும் *அஞ்சல் நிறுவனம்?* (அஞ்சல் துறையைக் குறிப்பிடவும்) இதனை பகுதி பகுதியாக செயல்படுத்தி வருகின்றது.
முன்பே சொன்னது போல் நீங்கள் ருத்ராட்சத்தைப் பெறும்போது ஏற்கனவே அது பதப்படுத்தப்பட்டுவிட்டதால் நீங்கள் மீண்டும் அதை செய்ய தேவையில்லை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ருத்ராட்சத்தை நெய்யில் 24 மணி நேரமும் அடுத்த 24 மணி நேரம் பாலிலும் ஊற வைத்து பதப்படுத்தலாம். அதன் பின் சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அணிந்துக்கொள்ளலாம்.
அது போல நிபந்தனைகள் ஏதும் இல்லை. மற்ற ருத்ராட்சத்துடன் சேர்த்து இதனையும் நீங்கள் கழுத்தில் அணிந்துக் கொள்ளலாம். ஏற்கனவே பிராண பிரதிஷ்டை மூலம் சக்தியூட்டப்பட்டுள்ளதால், இதை அணிவதற்கு முன் எந்தவொரு சடங்கினையும் பின்பற்ற தேவையில்லை.
இந்த ருத்ராட்சத்தை கீழ்க்கண்ட விதங்களில் நீங்கள் பராமரிக்க முடியும்:
சாயம் சேர்க்காத சுத்தமான பருத்தி அல்லது பட்டு நூலினால் ஆன கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிய வேண்டும். செம்பு, வெள்ளி அல்லது தங்க சங்கிலியிலும் கோர்த்து அணியலாம், ஆனால் ருத்ராட்சத்தை வெட்டி விடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், ருத்ராட்சத்தை சேதப்படுத்தி விரிசலை உருவாக்கும் விதமாக கம்பியை இறுக்கமாகவும் கட்டக்கூடாது. இந்த பார்சலில் ருத்ராட்சத்திற்கான ஒரு கயிறும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அடுத்த கேள்வியினையும் பாருங்கள்.
இந்த பார்சலில் இரண்டு விதமான கயிறுகள் இருக்கின்றன:
சிறிய கயிறு, ருத்ராட்சத்தை கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்வதற்கு.
பெரிய கயிறு அபய சூத்திரம், சந்தேகங்களையும் பயத்தினையும் போக்குவதற்காக சக்தியூட்டப்பட்ட கயிறு. இந்த அபய சூத்ரத்திவினை குறைந்தது ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) அணிந்திருக்க வேண்டும். பொதுவாக இது 3லிருந்து 4 மாதங்களை வரை பலனளிக்கும். இந்த சூத்திரத்தை உங்களது கைக்கடிகாரம் அல்லது மற்ற ஆபரணங்களுடன் சேர்த்து அது நீடித்து இருக்கும் வரை அணிந்துக்கொள்ளலாம்.
சூத்திரத்தை அகற்ற, அதன் முடிச்சுகளை அவிழ்க்கலாம் அல்லது எரித்து அவிழ்க்கலாம். எப்போதும் அபய சூத்திரத்தை கத்தரிக்கக்கூடாது.
சூத்திரத்தை நீங்கள் கீழ்க்கண்ட விதங்களில் அப்புறப்படுத்த முடியும்:
o பூக்கும் அல்லது பழம் தரும் மரங்களின் கிளைகளில் கட்டலாம்
o மண் ஈரமாக இருக்கும் ஒரு மரம் அல்லது செடிக்கு கீழே புதைக்கலாம்
o எரித்து அதன் சாம்பலை விசுத்தி சக்கரத்திலிருந்து ( தொண்டைக்குழி) கீழே அனாகதா சக்கரம் (நெஞ்சுக்குழிக்கு சற்றுக்கீழே) வரை பூசிக்கொள்ளலாம்
ருத்ராட்சத்தை தூய்மையான சாயம் கலக்காத பருத்தி நூலிலோ அல்லது பதனிடப்படாத பட்டு நூலிலோ கோர்த்து உங்கள் கழுத்தில் அணியலாம். இதனை செம்பு, வெள்ளி அல்லது தங்கச் சங்கிலியில் கோர்த்து அணியலாம், ஆனால் ருத்ராட்சத்தின் இருபுறங்களிலும் தொன்னை (கிண்ணம்) வடிவில் பொருத்துவது அல்லது கயிற்றை இறுக்கமாகக் கட்டுவது கூடாது. ஏனெனில் இதனால் ருத்ராட்சத்தின் உட்புறம் நொறுங்கி சேதமாகக்கூடும்.
பேக்கேஜில், இரண்டு வெவ்வேறு நூல்கள் இருக்கும். நீளமாக உள்ள நூல் அபய சூத்திரம். இதனை மணிக்கட்டில் குறைந்தபட்சம் 48 நாட்கள் அணிய வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அதை துண்டிக்கக் கூடாது/அறுக்கக் கூடாது. அளவில் சிறிய நூல் ருத்ராட்சத்திற்கான நூல். இதில் ருத்ராட்சத்தைக் கோர்த்து கழுத்தில் அணியலாம்.
ருத்ராட்ச தீட்சையுடன் சத்குரு ஒரு சாதனாவை வழங்கவுள்ளார். இதுகுறித்த விபரங்கள் வரவிருக்கும் மாதங்களில் பகிரப்படும்.